கோவையில் தொடரும் NIA சோதனை…

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் சமூகவலைதளங்களில் தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் 7 பேர் வீடுகளில் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

இலங்கை தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களுடன் கோவையை சேர்ந்த சிலருக்குசமூகவலை தளங்களில் தொடர்பு இருப்பது தேசியபாதுகாப்பு முகமை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கோவை உக்கடம் அன்புநகர், குனியமுத்தூர் உட்பட 7 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.

காலை 6 மணி முதல் இந்த சோதனையானது துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.கொச்சியில் இருந்து வந்த தேசிய பாதுகாப்பு முகமை டி.எஸ்.பி விக்ரம் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் கோவையில் உள்ள தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.கோவை போத்தனூரில் உள்ள சதாம்,அக்பர், அக்ரம்ஜிந்தா ஆகியோர் வீடுகளிலும், உக்கடம் அன்புநகர் பகுதியில் உள்ள அசாருதீன்,குனியமுத்தூர் அபுபக்கர் சித்திக் ஆகியோர் வீடுகளிலும்,அல்-அமீன்காலனியை சேர்ந்த இதயதுல்லா, ஷாகிம் ஷா ஆகிய 7 பேர் வீடுகளில் சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.

 

தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக கோவை மாநகர காவல்துறையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.சோதனையானது நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Leave a Reply