--- --:--:-- --

7 பேர் விடுதலைக்கு காலம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது! திருமாவளவன்

thirumavalavan_22

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் எம்.பி. யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை தண்டனைக்காலம் முடிந்து இன்னும் சிறையில் வைத்திருப்பது தேவை இல்லாதது என கூறினார். 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நிலவிய நெருக்கடியே பாஜக ஆட்சியிலும் நீடிப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.எனவே 7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon