கோவையில் குடும்ப பிரச்சனையில் மனைவியின் கழுத்தில் கேபிள் ஒயரை சுற்றி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.கவுண்டம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்த வேல்முருகன், சூரியபிரபா தம்பதியினரிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து இருக்கிறது.
இந்த நிலையில் திங்கள் கிழமை இரவு டியூஷன் சென்று வீடு திரும்பிய சூரிய பிரபாவின் குழந்தைகள் தாய் கேபிள் ஒயரால் கழுத்து இறுக்கப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்து கூச்சலிட்டு உள்ளனர். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கணவன் வேல்முருகனே மனைவி பிரபாவைகொலை செய்துவிட்டு தலைமறைவு ஆகியுள்ளது, தெரிய வந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.