ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் எம்.பி. யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை தண்டனைக்காலம் முடிந்து இன்னும் சிறையில் வைத்திருப்பது தேவை இல்லாதது என கூறினார். 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நிலவிய நெருக்கடியே பாஜக ஆட்சியிலும் நீடிப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.எனவே 7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள் :
வார இறுதி நாள்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
புதுவையில் மீனவர்கள் எம்எல்ஏவை முற்றுகையிட்டு வாக்குவாதம்..!
மோசடிக்கு உடந்தையாக இருந்த ஈ சேவை மைய உரிமையாளர்..!
பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் மத போதகர் கைது..!
மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர்..!
விஜய்யை கடுமையாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்!