தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி!

Publish by: --- Photo :


திருப்பூரில் இரண்டரை வயது  குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பெருமாநல்லூர் சாலை மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் வசித்து வந்தனர்.இவர்களின் இரண்டரை   வயது மகன் சந்தோஷ் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த போது அங்கு திறந்து வைக்கப்பட்டிருந்த தரைமட்ட தண்ணீர் தொட்டியில் வீழ்ந்து மூழ்கிவிட்டான்.

சந்தோஷ் விழுந்தது தெரியாமல் அருகிலிருந்தவர்கள் தொட்டியை மூடிச் சென்று விட்டனர். நீண்ட நேரம் ஆகியும் சந்தோஷின் குரல் கேட்காததால் சந்தேகமடைந்த தாய் மஹாலக்ஷ்மி அருகில் தேடி பார்த்து கிடைக்காமல் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்துள்ளார். அதில் சந்தோஷ் மூழ்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மஹாலக்ஷ்மி சத்தம் போட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து சந்தோஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சோதித்து பார்த்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.