பருவநிலை மாறுபாடு காரணமாக ஆர்டிக் பெருங்கடலில் உள்ள பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருவது உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்டிக் பகுதிகளில் கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட பனிப்பாறைகள் வெப்பமயமாதல் காரணமாக தற்போது மூன்று மடங்கு அளவிற்கு உருகி உள்ளதாகவும், இதனால் கடல் மட்டம் மிக வேகமாக உயருவதாகவும் அறிவியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது ஆர்டிக் பகுதியில் வழக்கத்திற்க்கு மாறாக வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸ் அளவிற்க்கு காணப்படுகிறது.
இது குறித்து சுற்றுசூழல் அறிஞர்கள் நடத்திய சோதனையில் உலகம் வெப்பமயமாதலின் காரணமாக சுற்றுசூழலில் பெரும் மாறுதல் நிகழ்ந்துள்ளதை கண்டறிந்துள்ளனர். பருவநிலை மாறுபாடுகள் ஏற்படும் அபாயகரமான விளைவுகளை தடுத்திடும் நடவடிக்கைகளை இனியும் காலம் தாழ்த்தாமல் உலக நாடுகள் முன்னெடுத்து செல்ல வேண்டிய அவசியத்தை இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் அறிவியல் வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். சமீப காலமாக இந்த பகுதியில் வசிக்கும் கரடிகளின் வாழ்வியல் நடவடிக்கைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. உணவிற்காக இடம் பெயர்ந்திடும் அவலமும், அவற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தும் வருகிறது.
இப்பகுதியில் ஏற்பட்ட விலங்குகளின் உணவு சங்கிலி பாதுகாப்பு இனி வருங்காலங்களில் உலகிலுள்ள மற்ற உயிரினங்களிடமும் பிரதிபலிக்கும் என்ற அறிவியல் வல்லுனர்களின் கூற்றையும் மறுத்து ஒதுக்கி விட இயலாது. வெப்பநிலை உயர்வின் காரணமாக ஆர்டிக் துருவ பகுதியில் அதிக அளவில் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் கடல் நீர்மட்டம் உயர்ந்து ஆசியாவின் வங்க தேசத்தையும், அமெரிக்காவின் சில நகரங்கள் தண்ணீருக்குள் மூழ்கடித்துவிடும் என்ற அபாயகரமான கணிப்புகளும் வெளியாகியுள்ளது. இதை தொடர்த்து உலகிலுள்ள 80 முதல் 90 சதவீதம் மக்களும் பலியாவர்கள் என்றும் ஒட்டு மொத்த மனித சமூகத்திற்குமே அச்சுறுத்தாலாக இருக்கும் என்ற அதிர்ச்சி அறிக்கையும் வெளியாகியுள்ளது.