மாலத்தீவு சென்றிருக்கும் பிரதமர் மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கப்படுகிறது. இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது அவருக்கு கொடுக்கும் மிகப்பெரிய மரியாதையாக கருதப்படுகிறது.
அதைத்தவிர அந்த நாட்டின் மிகவும் உயரிய விருதும் அளிக்கப்படுகிறது. மாலத்தீவு அதிபர் சோலி பிரதமர் நரேந்தர மோடியின் பதவி ஏற்பு விழாவிலே கலந்து கொண்டார். அப்போது இருந்தே அண்டை நாடுகளுடனான உறவை பலப்படுத்துவதற்காக முயற்சிகள் தொடர்ந்து செய்யப்படும் என்று இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அப்போதே பிரதமர் நரேந்தர மோடி, சோலி சந்திப்பு நிகழ்ந்திருந்தது. அந்த சந்திப்பின் போதுதான் மாலத்தீவுக்கு வரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கபட்டது.
அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு தன்னுடைய இரண்டாவது பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக தற்போது மாலத்தீவு வந்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவருக்கு அந்த நாட்டின் உயரிய விருது வழங்கப்படுவது மற்றும் நாடாளுமன்றத்தில் உரையாற்ற அவர் அழைக்கப்பட்டிருப்பது என இவை இரண்டுமே மாலத்தீவு அரசு அவருக்கு கொடுக்கும் மிகப்பெரிய மரியாதையை சுட்டிக்காட்டுகிறது. பிரதமர் மோடி அடுத்தகட்டமாக இலங்கைக்கு செல்ல இருக்கிறாா்.