மாற்றுத்திறனாளி மற்றும் அவரது சகோதரிகளை ஏமாற்றி 84 லட்ச ரூபாய் மோசடி!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை மாநகராட்சிக்குட்பட்ட பீளமேடு லட்சுமிபுரத்தில் வசிப்பவர் லதா தங்கம்.இவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு 2 கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி.இவருக்கு சாந்தி தங்கம்,ராணி தங்கம்,ஷீலா தங்கம், சுஜா தங்கம் என 4 சகோதரிகள் உள்ளனர்.இவர்களில் சாந்தி தங்கத்தின் மகன் ரித்திக் மூலம் விருதுநகர் காரியாபட்டியை சேர்ந்த ஜெயகார்த்திக் ( தற்போது சென்னை கே.கே.நகரில் வசித்து வருகிறார் ) என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

 

இந்த நிலையில் ஜெயகார்த்திக் மாற்றுத்திறனாளி லதா தங்கம் மற்றும் அவரது சகோதரிகளிடம் தான் ஆன்லைன் வர்த்தகம் செய்து வருவதாகவும்,அதில் தனக்கு நன்கு வருமானம் வருவதாகவும்,தாங்களும் இவ்வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

 

இதனை உண்மை என நம்பிய சகோதரிகள் 84 லட்ச ரூபாயை முதலீடு செய்துள்ளனர். சில மாதங்கள் லாபத் தொகையாக சில ஆயிரங்களை ஜெயகார்த்திக் கொடுத்துள்ளார். பின்னர்,கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும்,பணம் கொடுக்க வேண்டியவர்களிடம் பணம் பெற்று வர சாந்தி தங்கத்தின் காரையும் ஏமாற்றி எடுத்துச் சென்றுள்ளார். பல மாதங்களாக கொடுத்த பணமும்,காரும் திரும்ப கிடைக்காததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த சகோதரிகள் தாங்கள் கொடுத்த பணத்தினையும் மீட்டுத்தரக்கோரி மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர்,இச்சம்பவம் குறித்து மாநகர குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

சகோதரிகளிடம் பணம் பெற்றும்,காரை எடுத்து சென்றதும் விசாரணையில் தெரிய வந்ததால் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின் படி ஜெயகார்த்திக்கை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மாற்றுத்திறனாளியும்,அவரது சகோதரிகளிடம் 84 லட்ச ரூபாய் மோசடி செய்த ஜெயகார்த்திக்கை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply