மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அன்னூர் WEPS பள்ளி அசத்தல்

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கரியாம்பாளையம் அருகே ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி நடப்பு கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது.பள்ளியில் மாணவர் சேர்க்கை முடிவடைந்து இன்று முதல் வகுப்புகள் தொடங்கின.இப்பள்ளியில் ப்ரீ.கே.ஜி‌  முதல் 8 ஆம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

முதல் நாளான இன்று புதியதாக பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்கும் விதமாக பள்ளியின் நிர்வாக இயக்குநர் சசிராஜ் குமார்,நிர்வாக அறங்காவலர் ரவிக்குமார்,முதல்வர் ஆண்டனி விவி இனிப்புகளை வழங்கி வரவேற்றனர்.

மேலும்,பள்ளி மாணவர்களிடையே மரம் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியும்,பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட வைத்தும் வித்தியாசமான முறையில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஈக்விடாஸ் எஸ்.எம்.இ வங்கி மேலாளர் நஸரீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.முடிவில் பி.ஆர்.ஓ.பூரணி நன்றி தெரிவித்தார்.


Leave a Reply