நீட் தேர்வில் மாற்று திறனாளிகள் பிரிவில் இந்திய அளவில் ஐந்தாம் இடம் பிடித்து கரூரைச் சேர்ந்த மாணவர் கார்வண்ணன் பிரபு சாதனை படைத்திருக்கிறார்.நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. அதில் கரூரைச் சேர்ந்த மாணவர் பிரபு 720 மதிப்பெண்களுக்கு 572 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழக அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் ஐந்தாவது இடத்தையும் எடுத்து மாணவர் பிரபு சாதனை படைத்திருக்கிறார்.