சென்னை அருகே மீண்டும் ஒருவருக்கு மர்ம உறுப்பு அறுப்பு! அடுத்தடுத்து அரங்கேறும் திக்..திக்.. சம்பவம்!

Publish by: --- Photo :


சென்னை மாதவரம் அருகே மீண்டும் ஒருவருக்கு மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை அடுத்துள்ள மாதவரம் ரெட்டேரி மேம்பாலம் பகுதியில் படுத்திருந்த குளத்தூரைச் சேர்ந்த அஸ்லம் பாஷா மர்ம உறுப்பு துண்டிக்கபட்ட நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

இதையடுத்து போலீசார் அஸ்லம் பாஷாவிடம் விசாரணை செய்த போது குடும்ப தகராறு காரணமாக தான் இது போன்று செய்து கொண்டதாக தெரிவித்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அஸ்லம் பாஷாவின் மரணத்தை தற்கொலை என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அஸ்லம் பாஷா படுத்திருந்த அதே ரெட்டேறி பாலத்தின் அடியில் கூடங்குள்ளத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் நேற்று மது போதையில் படுத்திருந்தார்.இந்நிலையில் அவரும் மர்ம உறுப்பு அறுக்கபட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாதவரம் போலீசார் நடத்திய விசாரணையில் தன்னை ஓரின சேர்க்கைக்கு ஒருவர் அழைத்ததாகவும் மறுத்ததால் தனது மர்ம உறுப்பை அந்த நபர் துண்டித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஒரே மாதிரியான இரு சம்பவங்கள் அடுத்தடுத்து ஒரே இடத்தில் நிகழ்ந்து இருப்பதால் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply