சென்னையில் சிறுமியை கடித்து குதறிய வெளிநாட்டு நாய்!

சென்னையை அடுத்த மாங்காட்டில் சாலையில் நடந்து சென்ற சிறுமி உட்பட 3 பேரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறியது. மாங்காடு ஸ்ரீ ராம ஜெயம் பகுதியை சேர்ந்த சுகந்தி என்பவர் வெளிநாட்டு ரகமான ராட்வீலர் என்ற நாயை வளர்த்து வருகிறார்.இவர் வீட்டின் முன் பக்க இரும்பு கேட்டை திறந்து வெளியே சென்ற பொது அந்த நாய் வீட்டிலிருந்து வெளியே ஓடியுள்ளது.அப்போது கடைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அதே தெருவை சேர்ந்த கீர்த்தனா என்ற 12 வயது சிறுமியை நாய் துரத்தி சென்று கடித்து குதறியுள்ளது.

 

சிறுமியை நாயிடம் இருந்து போராடி மீட்ட இரண்டு பேருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. நாயால் கடிபட்டு படுகாயமடைந்த சிறுமிக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Leave a Reply