12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! தேயிலை தோட்டத்தொழிலாளி கைது

பொள்ளாச்சியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேயிலை தோட்டத்து தொழிலாளி ரூபன் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் வசிப்பவர் ரூபன். இவருக்கு திருமணமாகி தாமரைக்கனி, தீபா என்ற இரண்டு மனைவிகள் மற்றும் 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வந்துள்ளார்.மேலும், அதே எஸ்டேடில் தேயிலைத்தோட்ட த்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அதே எஸ்டேட் பகுதியில் வசிக்கும் 12வயது சிறுமியை தொடர்ந்து பாலியியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.இதே போல் கடந்த 25ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

 

இது குறித்து பாதிக்கபட்ட அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரூபன் மீது புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரனை செய்த வந்த நிலையில் தலைமறைவான ரூபனை தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்த ரூபனை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.பின்னர், அனைத்து மகளிர்காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Leave a Reply