திருப்பூாில் திமுக கூட்டணி சார்பில், வெற்றிக்கு வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு தொடர்வதால் பெரும் பரபரப்பு

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 – ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், திமுகழக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே. சுப்பராயன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆனந்தனை விட 93 ஆயிரத்து 368 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

 

இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன், உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் புகைப்படங்கள் பொறித்த பிளக்ஸ் பேனர் திருப்பூர் பகுதியில் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர்.
அந்த வகையில் திருப்பூர் மாநகரம் 20 வது வட்டம் போயம்ளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பேனர் வைக்கப்பட்டது

அதில் திமுகழக கூட்டணிக்கட்சியான ஐ ஜே கே கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பேனர் வைத்தனர்
இந்நிலையில் போயம்ளையம் பகுதியில் நிர்வாகிகள் சார்பில், வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வைக்கப்பட்டிருந்த பிரமாணட்டமான பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர்

 

இது குறித்து திருப்பூா் அனுப்பர்பாளையம் காவல் துறையினர், விசாரணை செய்து வருகின்றனர்.

 

திருப்பூர் பகுதியில் தொடர்ந்து திமுக கூட்டணி பிளக்ஸ் பேனர்கள் கிழிப்பு சம்பவங்கள் தொடர்வதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Leave a Reply