நண்பர்களுடன் குளிக்கச்சென்ற இளைஞர் குளத்தில் மூழ்கி பலி!

நண்பர்களுடன் குளிக்கச்சென்ற போது நீச்சல் தெரியததால் குளத்தில் மூழ்கி இளைஞர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள பெள்ளாதி பகுதியை சேர்ந்தவர் தினேஸ்குமார் ( வயது 25 ).இவர் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து வெள்ளியங்காடு பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.அனைவரும் இணைந்து நீரில் குளித்துள்ளனர்.அப்போது,ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார் தினேஷ் குமார்.நீச்சல் தெரியாத காரணத்தால் ஆழமான பகுதிக்குள் சென்ற அவரை காப்பாற்ற நண்பர்கள் முயன்றுள்ளனர்.இருந்த போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை.ஆழமான பகுதிக்கு சென்ற தினேஷ்குமார் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

இச்சம்பவம் குறித்து அறிந்த காரமடை காவல் துறையினர் விரைந்து வந்து சடலத்தை மீட்கப்போராடினர்.எனினும்,இருட்டத்தொடங்கி விட்டதால் தேடும் பணியினை காவல் துறையினர் கைவிட்டு இன்று காலை சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர்.மேலும்,இச்சம்பவம் குறித்து காரமடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நீச்சல் தெரியாத காரணத்தால் குளத்தில் மூழ்கி இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply