உடலில் காயங்களுடன் சிறுமியின் சடலம் முட்புதரில் மீட்பு

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள முட்புதரில் காயங்களுடன் சுமார் 3 வயது சிறுமியின் பிரேதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரது மகள் ஸ்ரீதேவி (3).இந்த சிறுமி இன்று காலை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு பகுதியில் உள்ள முட்புதரில் உடலில் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டி காவல்துறையினர் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர். மேலும்,சிறுமியின் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சடலத்தை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

 

இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காவல் துறையினரின் விசாரணையில் கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் 3 வயது மகள்தேவிஸ்ரீயை கொன்றதாக தமிழ்ச்செல்வன் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்

 

தேவிஸ்ரீ கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.


Leave a Reply