வீட்டு வரி புத்தகம் வழங்க 12 ஆயிரம் லஞ்சம்! கோவை மாநகராட்சி உதவி ஆணையர் கைது !

Publish by: விஜயகுமார் --- Photo :


கோவையில் 12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வடக்கு மண்டல மாநகராட்சி உதவி ஆணையாளரையும் ,தரகரையும் லஞ்சம் ஒழிப்புத்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை கணபதி நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் குமார்.இவர் தனது வீட்டு வரிபுத்தகத்திற்கு விண்ணப்பித்திருந்த போது புத்தகம் வழங்க 15 ஆயிரம் ரூபாயை தரகர் பாலகிருஷ்ணன் மூலம் மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையாளர் ரவிக்குமார் லஞ்சமாக கேட்டுள்ளார்.பின்னர், பேரம் பேசி 12 ஆயிரம் தந்தால்தான் வரிப்புத்தகம் வழங்கப்படும் எனக்கூறியுள்ளனர்.

இது தொடர்பாக குமார் லஞ்ச ஒழிப்புத்திறையினரிடம் புகார் அளித்துள்ளார்.பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் படி ரசாயனம் தடவிய பணத்தை ரவிக்குமாரிடம்,குமார் கொடுத்துள்ளார். அப்போது,அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக ரவிக்குமாரையும்,தரகர் பாலகிருஷ்ணனையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதோடு உதவி ஆணையாளர் ரவிக்குமார், தரகர் குணசேகரன் இருவரையும் கைது செய்துள்ளனர்.

 

லஞ்சம் பெற்ற புகாரில் உதவி ஆணையரும்,தரகரும்கைது செய்யப்பட்ட சம்பவம் மாநகராட்சி அதிகாரிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply