தலை துண்டித்த நிலையில் உடல் மீட்பு

மதுரை முத்துப்பட்டி அடுத்த அய்யனார்புரம் ஆசிரியர் காலணியை சேர்ந்த சௌந்தர் என்பவர், அதே பகுதியில் உள்ள தனது சித்தப்பா லோகநாதன் என்பவரின் வீட்டில் இருந்துள்ளார்.

 

அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், லோகநாதான் வீட்டிற்குள்ளே நுழைந்து சௌந்தரை சரமாரியாக வெட்டினர்.

 

இதனை தடுக்க முயன்ற லோகநாதனையும் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
சௌந்தர் உயிரிழந்ததை அடுத்து, அந்த குமபல், தலையை துண்டாக வெட்டி முட்புதரில் வீசி சென்றுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

 

கொலை செய்யப்பட்ட சௌந்தர் மீது சுப்ரமணியபுரம், ஜெய்ஹிந்திபுரம் காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply