திருப்பூர் ‘சிஸ்மா’ பொதுச்செயலாளர் பாபுஜி உடல் நலக்குறைவால் காலமானார்!

திருப்பூரு ‘சிஸ்மா’ பொது செயலாளர் பாபுஜி, உடல் நலக்குறைவால் இன்று மதியம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்; அவருக்கு வயது 54.

 

பின்னலாடை நகரான திருப்பூரில் பல்வேறு தொழில் அமைப்புகள் உள்ளது. அதில் ஒன்று, தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கம் – சிஸ்மா. அதன் பொதுச் செயலாளராக இருந்து வந்தவர் பாபுஜி. தொழிற்துறையினர், தொழிலாளர்கள் என்று, இரு தரப்பினர் மத்தியிலும் நல்லுறவு கொண்டிருந்தவர்.

 

இன்று காலை பாபுஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாபுஜி இறந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.

 

சிஸ்மா பாபுஜியின் திடீர் மறைவு திருப்பூர் தொழிற்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Leave a Reply