இந்து தீவிரவாதி என்று கூறிய விவகாரம்! கமலுக்கு முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!!

இந்து தீவிரவாதி என்று கூறிய வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.

 

அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் மீது நடவடிக்கை கோரி, இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின்போரில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இவ்வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்து இருந்தது.

 

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, கமல்ஹாசனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.


Leave a Reply