நான் ஓய்வு பெறப்போகிறேன் – மோடி பரபரப்பு பேட்டி! பிரதமரான பின் முதல்முறையாக செய்தியாளர் சந்திப்பு!!

தேர்தல் பிரசாரங்கள் முடிந்துவிட்டன; நான் சிறிது ஓய்வெடுக்க போகிறேன்; நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

மக்களவை தேர்தல் பிரசாரங்கள் நிறைவு பெற்ற நிலையில், டெல்லியில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன், பிரதமர் மோடி கூட்டாக பேட்டி அளித்தனர். பிரதமரான பிறகு மோடி செய்தியாளர்களுக்கு அளிக்கும் முதல் பேட்டி இதுவாகும். அவர் கூறியதாவது:

 

தேர்தல் பிரசாரம் முடிந்துவிட்டது; இனி நான் சற்று ஓய்வெடுக்கலாம். இது ஜனநாயகத்தை கொண்டாட வேண்டிய தருணம். தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி.

 

கடந்த 2 தேர்தல்களில், ஐபிஎல் போட்டி கூட நடைபெறவில்லை. அரசு வலுவாக இருந்தால், ஐபிஎல், ரம்ஜான், பள்ளி பரீட்சை இன்னும் பிறவும் அமைதியாக நடக்கும். பண்டிகை மற்றும் கிரிக்கெட் போல, தேர்தலும் ஒரு திருவிழாவை போல நடக்கிறது.

 

ஆட்சியில் நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல; 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளோம். மக்களின் ஒருமித்த ஆதரவு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை உள்ளது.

 

நாட்டை ஆள்வதற்கு எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின், வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம். கடந்த 5 வருடம் ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி என்று மோடி குறிப்பிட்டார்.


Leave a Reply