இராமநாதபுரத்தில் ஜூனியர் குப்பண்ணா ஓட்டல் வந்தாச்சு!!

உணவுப்பிரியர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், புகழ்பெற்ற ஜூனியர் குப்பண்ணா ஓட்டல், இராமநாதபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது.

 

மூன்று தலைமுறை அனுபவம் உள்ள, 59 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ஈரோடு சமையல் கலைஞர்களை கைவண்ணத்தில், தென்னிந்தியாவிலும், சிங்கப்பூரிலும் என, 49 கிளைகளை கொண்டு, வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஓட்டல் ஜூனியர் குப்பண்ணா, இராமநாதபுரம் கிளை திறப்பு விழா, டி.சினிமா வளாகத்தில் நடைபெற்றது.

 

திறப்பு விழாவிற்கு வந்திருந்தவர்களை, தனரத்தினம் ஜெகநாதன், ரோட்டேரியன் தினேஷ்பாபு, டாக்டர் ரம்யா தினேஷ்பாபு, அரவிந்த் ஜெகன், அருணன் ஜெகன் ஆகியோர் வரவேற்றனர். ஜூனியர் குப்பண்ணா ஹோட்டலை, கனகமணி மருத்துவமனை டாக்டர் அரவிந்தராஜ் திறந்து வைத்தார்.

 

 

ரோட்டரி முன்னாள் ஆளுநர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். நிறுவனம் மேலாண்மை இயக்குனர்கள் மூர்த்தி, ஆறுமுகம், சந்துரு பங்கேற்றனர். ரோட்டரி முன்னாள் ஆளுனர் ஆறுமுக பாண்டியன், காபி எக்ஸ்பிரஸ் ஷாப் திறந்து வைத்தார். ரோட்டரி ஆளுனர் தேர்வு டாக்டர் ஷேக் சலீம், முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.

 

லயன் முன்னாள் ஆளுனர் ஆடிட்டர் சுந்தராஜன் காபி ஷாப் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மூத்த வக்கீல் நாகராஜன் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார். விஜயராணி முத்து ராமகிருஷ்ணன், கவுசல்யா ஜெயராமன், கலைமகள் சுகுமார், கஸ்துாரிராஜா மணி, சசிகலா வெற்றிவேல் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

 

ஜெகன் தியேட்டர் உரிமையாளர் ரோட் டேரியன் சுகுமார், வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், பஞ்சாப் நேசனல் வங்கி மேலாளர் பிரணன் பிரசன்ன குமார், இராமநாதபுரம் மாவட்ட ஓட்டல் பேக்கரி டீஸ்டால் உரிமை யாளர்கள் சங்கம் நிர்வாகி சோம சுந்தரம் முன்னிலை வகித்தனர். ஜூனியர் குப்பண்ணா இராமநாதபுரம் கிளை உரிமையாளர் தினேஷ் பாபு நன்றி தெரிவித்தார்.


Leave a Reply