புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் கயல்விழி (வயது 21). ராமநாதபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (22). இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் டைலராக வேலை செய்து வந்தனர். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனி பகுதியில் உள்ள தாங்கள் வேலை செய்த பனியன் கம்பெனிக்கு சொந்தமான லைன் வீட்டில் கடந்த ஒரு மாதமாக வசித்து வந்தனர்.
இந்தநிலையில் 3 நாட்களாக இருவரும் கம்பெனிக்கு போகவில்லை.இந்தநிலையில் விக்னேஷ் கயல்விழியின் அக்காவிற்கு போன் பண்ணி உங்கள் தங்கை வீட்டில்தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த கயல்விழியின் அக்கா அவர் வேலை செயத் நிறுவனத்திற்கு தொடர்புகொண்டு கேட்டுள்ளார்.
அப்போது கயல்விழி வேலைக்கு வரவில்லை என தெரிவந்தது. பின்னர் அவர் குடியிருந்த வீடிற்ற்கு சென்றபோது வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது பின்னர் பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க போலீசார் வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது கயல்விழி கொலை செய்யப்பட்டதும் அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகி துர்நாற்றம் வீசியதும் தெறியவந்தது.
பின்னர் கயல்விழியின் உடலை கைப்பற்றியா போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய கோவைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பூண்டி போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையில் கயல்விழியின் கணவர் விக்னேஷ் நேற்று முன்தினம் வரை அவர்கள் குடியிருந்த தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தின் கீழ் சோகமாக உட்கார்ந்து இருந்ததும், அப்போது மழை பெய்தபோது மழையிலேயே நனைந்து உட்கார்ந்து இருந்ததும் தெரியவந்தது.
மேலும் சில நாட்களுக்கு முன் ஒரு பெண் காணவில்லை இங்கே தான் இருப்பதாக தகவல் வந்ததாக 8 பேருக்கும் மேல் கொண்ட ஒரு குழு விசாரித்து சென்றுள்ளனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை. விக்னேஷை பிடித்தால் தான் தெரியும். பெண்ணின் உறவினர்கள் கொலை செய்தார்களா? அல்லது விக்னேஷிற்க்கும் கயல்விழிக்கும் தகராறு ஏற்பட்டு அதில் கோபமடைந்த விக்னேஷ் கொலை செய்தாரா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.