கொஞ்சமாவது ‘ரெஸ்பான்ஸ்’ வேண்டாமா? ஒரு தவறால் 4 கோடியே 60 லட்சம் பண நோட்டுகள் போச்சே!

ஆஸ்திரேலியாவில், 50 டாலர் மதிப்புள்ள நோட்டில் ஒரு வார்த்தை தவறாக அச்சிடப்பட்டிருப்பது ஒரு வருடத்திற்கு பின்னர் தெரியவந்துள்ளது; இதையடுத்து, 4 கோடியே 60 லட்சம் பண நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறது.

 

ஆஸ்திரேலியாவில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் சுமார் 11 ஆயிரம் கோடி (2.3 பில்லியன்) மதிப்பில், 4 கோடியே 60 லட்சம் (46 மில்லியன்) எண்ணிக்கையில், 50 டாலர் மதிப்பு கொண்ட நோட்டுகள் அச்சிடப்பட்டன.

 

இந்த டாலர் நோட்டின் ஒரு பக்கத்தில் அந்நாட்டு பார்லிமென்டின் முதல் பெண் எம்.பி.,யான எடித் கோவானின் முதல் உரை சிறிய எழுத்துகளில் இடம் பெற்றிருந்தது. இந்த நோட்டில், ‘ரெஸ்பான்ஸிபிலிட்டி’ (responsibility) என்ற வார்த்தை, i எழுது விடுபட்டு, தவறுதலாக ‘ரெஸ்பான்ஸிபில்டி’ (responsibilty) என்று அச்சிடப்பட்டுள்ளது.

 

ஆஸ்திரேலிய டாலர் நோட்டில் இடம் பெற்றுள்ள எழுத்துப்பிழை வட்டமிடப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டில் அச்சிடப்பட்டு ஆஸ்திரேலிய ரிவர்வ் வங்கியின் மூலம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இத்தனை நாட்கள் யாரும், இந்த எழுத்துப்பிழையை கண்டுபிடிக்கவில்லை.

 

ஒருவர் இதை தற்செயலாக பார்த்து, இன்ஸ்டாகிராமில் அதை பதிவிட்ட பிறகே, தவறு ஆஸ்திரேலிய ரிசர்வ் நிர்வாகத்திற்கு தெரியவந்தது. பிழை இருப்பதை அது ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, 4 கோடியே 60 லட்சம் எண்ணிக்கையிலான நோட்டுகள் அழிக்கப்பட்டு, எழுத்துப்பிழை திருத்தப்பட்டு புதிய 50 டாலர் நோட்டுகள் அச்சிடப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.


Leave a Reply