பாரதிய ஜனதாவில் சேரப் போகிறேனா? த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பதில்

தமாகாவை பாஜகவுடன் இணைப்பதாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என்று, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து உருவான தமிழ் மாநில காங்கிரஸ், இம்முறை நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. தேர்தல் பிரசாரத்தின் போது, இக்கூட்டணியில் இடம் பெற்ற நரேந்திர மோடியில் சாதனை கூறி, ஜி.கே. வாசன் வாக்கு சேகரித்தார்.

 

பாரம்பரிய காங்கிரஸ் கட்சியில் இருந்து, பின்னர் அதிலிருந்து விலகினாலும் கூட, காங்கிரஸ் கட்சியின் நேர்மாறான கொள்கைகளை உடைய பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாசக் வாக்கு சேகரித்தது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

 

இதற்கிடையே, கடந்த வாரம் நிகழ்வு ஒன்றுக்காக டெல்லிக்கு வாசன் சென்றிருந்தார். ஆனால், பாஜக தலைவர்களை சந்தித்து, மத்திய அமைச்சரவையில் தனக்கு வாசன் இடம் கேட்டதாக, சில செய்திகள் வெளியாகின. பாஜகவுடன் தமாகாவை இணைக்கவும் திட்டமிட்டதாக, அந்த செய்திகளில் கூறப்பட்டிருந்தது.

 

இதை தொடர்ந்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியில் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி, கருத்து வேறுபாட்டால் தமாகாவுக்கு சென்ற தொண்டர்கள், காங்கிரசில் மீண்டும் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தாமாகாவினருக்காக சத்தியமூர்த்தி பவன் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

இந்த நிலையில், பாஜகவுடன் தமாகா இணைப்பு என்ற செய்தியை, ஜி.கே.வாசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமாகாவை பாஜகவுடன் இணைப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை; தமாகாவின் வளர்ச்சியை பொறுக்காமல் சதி செய்வதாக, அவர் குறிப்பிட்டார்.


Leave a Reply