அமமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்! சூலூரில் டிடிவி தினகரன் உற்சாகம்!!

சூலூரில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த 2000 பேர், டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர்.

 

கோவை மாவட்டம் சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, அரசியல் கட்சி தலைவர்கள் சூலூரில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சூலூர் சட்டசபை தொகுதிக்கட்பட்ட பகுதிகளில், தமது கட்சி வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து, தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது,சூ லூர் பகுதியில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

 

இக்கூட்டத்திற்கு பிறகு, அதிமுகவை சேர்ந்த மோப்பிரிபாளையம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சசி குமார் தலைமையில் 600 க்கும் மேற்பட்டோர், காங்கிரஸை சேர்ந்த சாமளாபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சாந்தா லட்சுமணன் தலைமையில் 100 பேர் உள்பட, 2000 க்கும் மேற்பட்டோர், டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர். இதனால், தினகரன் மிகுந்த உற்சாகமடைந்தார்.


Leave a Reply