ஆக்டோபசை உயிருடன் விழுங்க முயன்ற பெண்! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – வைரல் வீடியோ!!

சீனாவில், ஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற இளம் பெண்ணின் கன்னத்தை ஆக்டோபஸ் ஒட்டிக்கொண்டு கடிக்கும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சீனர்கள் எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமானவர்கள். பாம்பு, பல்லி, பூரான், கரப்பான்பூச்சிகளை சர்வ சாதாரணமாக சாப்பிட்டு, நமக்கு குமட்டலையோ, அருவெறுப்பையோ வரவைப்பார்கள்.

 

அப்படித்தான், சீனாவை சேர்ந்த உணவு இணையதளத்தை நடத்தி வரும் பெண்ணின் விளையாட்டான செயல், விபரீதத்தில் போய் முடிந்தது. அவர், தனது உணவு செய்முறை குறித்த நேரலையின் போது, ஆக்டோபசை உயிருடன் சாப்பிட உள்ளதாக கூறி, பார்வையாளர்களை ஆச்சரிய தகவலை தந்தார்.

 

 

அதேபோல், ஒரு ஆக்டோபஸை எடுத்து, சாப்பிட முயன்றார். அப்போது அது அவரது கன்னத்தில் படர்ந்து ஒட்டிக் கொண்டது; உடனே, மென்மையான அவரது கன்னதை, பதம் பார்க்க தொடங்கியது.

 

இதை சற்று எதிர்பாராத அந்த பெண், ஐயோ என்று அலறத் தொடங்கினார். கடித்த ஆக்டோபசை கன்னத்தில் இருந்து இழுக்க முயன்று போராடினார். ஒருவழியாக ஆக்டோபஸை அவர் எடுத்துவிட்டார்; ஆனால், கன்னத்தில் காயம் ஏற்பட்டது.


Leave a Reply