திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்!

திருவாடானையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிரத்தினேஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் நடைபெற்றது.

 

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ ஆதிரத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில், ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறும்.

 

இந்த வருடம் வைகாசி வசாக திருவிழா கொடியேற்றம், 22 1/2 நாட்டார்கள் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக புதன்கிழமை இரவு அனுக்ஞை, கணபதி பூஜை, வாஸ்த்து சாந்தி , துஜபடம் ஆகிய பூஜைகள் நடைபெற்றன.

 

 

விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்லாக்கு வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், இந்திர விமான வாகனம், குதிரை வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரும் மே 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறும்.


Leave a Reply