நெருக்கடிகளை தாண்டி இலங்கையில் அரசை கைப்பற்றுவேன்! ராஜபக்சே சூளுரை!

இலங்கையில் எத்தகைய நெருக்கடிகள் இருந்தாலும், அனைத்தையும் வெற்றிகொண்டு அரசை கைப்பற்றுவேன் என்று, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

 

தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு இலங்கையில் இன்னமும் பதற்றம் நீடிக்கிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, ஆட்சியை கைப்பற்ற, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கட்சித் தலைவரான ராஜபக்சே திட்டமிட்டு வருகிறார். இதற்காக, சகோதரர் கோத்தபயா, முன்னாள் பாதுகாப்புத்துறை ஆலோசகர்கள் ஆகியோருடன் ராஜபக்சே தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

 

இந்த நிலையில், கொழும்பு நகரில் நடந்த மே தின கூட்டத்தில் அவர் உரையாற்றியது, இதை உறுதிப்படுத்துவது போல் உள்ளது. அவர் பேசியதாவது:

 

தொழிலாளர்கள் குறித்து, ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பத்திலிருந்து அக்கரை கொள்ளவில்லை. இவர்கள் மேற்கத்திய தொழில் கலாசாரத்திற்கு அடிபணிந்துவிட்டனர். நாட்டில் தற்போது கொள்கையற்ற அரசு உள்ளதால், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

 

அரசியலில் காணப்படும் போட்டித்தன்மையால், இன்று சர்வதேச பயங்கரவாதம் நாட்டுக்குள் ஊடுருவிட்டது. இந்திய புலனாய்வுத்துறை முன்கூட்டியே எச்சரித்தும், அரசு எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இதன் பின்னணியில் பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

 

தற்போதைய அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆட்சிமாற்றம் ஒன்றே தீர்வாகும். நிச்சயம் ஆட்சியை நிச்சயம் கைப்பற்றுவோம் என்றார்.


Leave a Reply