இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இதை கண்டித்து வரும் 3ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

 

இது தொடர்பாக, அதன் ஊடகப்பொறுப்பாளர் அப்துல் ரஹ்மன வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் இரு நூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இலங்கை தாக்குதலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இது தொடர்பாக வரும் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணியளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.


Leave a Reply