மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் 942 முறை குண்டுவெடிப்பு! பட்டியலிட்டு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியில் ஆட்சி காலத்தில், இந்தியாவில் இதுவரை 942 முறை குண்டு வெடிப்புகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

 

அண்மையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. ஆடியில் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் வெடிகுண்டுகள் சத்தம் எதுவும் கேட்கவில்லை என தெரிவித்திருந்தார்.

 

ஆனால், இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக, பேக்ட்செக்கர்.இன் என்ற ஆங்கில இணையதளத்தில் வெளியான பட்டியலை தனது டிவிட்டர் பக்கத்தில் மேற்கோள்காட்டி பதிவிட்டுள்ளார்.

குண்டு வெடிப்பு எண்ணிக்கை தொடர்பாக டிவிட்டரில் ராகுல் தெரிவித்த கருத்து.

 

புல்வாமா, பதன்கோட், உரி, கட்ச்ரோலி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் என, மொத்தம் 942 முறை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது; இதை பிரதமர் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.


Leave a Reply