4 தொகுதி இடைத்தேர்தலில் 137 வேட்பாளர்கள் போட்டி! அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 63 பேர்!!

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 137 பேர் களத்தில் உள்ளனர்.

 

தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள், வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் முடிவுகள், வரும் 23 ஆம் தேதியன்று வெளியாகிறது.

 

இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. மனுக்கள் பரிசீலனை, திரும்ப பெறுதல் ஆகியவற்றுக்கு பிறகு, 4 தொகுதிக்கான வேட்பாளர் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

 

அதன்படி, சூலூரில், 22 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, அரவக்குறிச்சி 63 பேர் , திருப்பரங்குன்றதில், மொத்தம் 37 பேர், ஒட்டப்பிடாரத்தில் 15 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 4 தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


Leave a Reply