சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! பேரவை செயலாளரிடம் மனு கொடுத்தது திமுக!!

Publish by: --- Photo :


தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக பேரவைச் செயலாளரிடம் திமுக மனு அளித்தது.

 

தமிழகத்தில், இடைத்தேர்த்ல நடந்துள்ள 18 சட்டசபை தொகுதிகள், வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் 4 சட்டசபை தொகுதிகள் என, மொத்தம் 22 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள், மே 23 இல் வெளியாக உள்ளது.

 

அதிமுக, இதில், பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றால் தான் ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் ஆகிய மூன்று பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.

 

அதன்படி, சில தினங்களுக்கு முன் சபாநாயகர் தனபாலை சந்தித்த அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் ஆகியோர் கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சபாநாயகரிடம் முறையிட்டனர்.

 

அதன்படி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தின சபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய 3 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், 7 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இதையடுத்து, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வர திமுக முடிவு செய்துள்ளது. அதற்காக, சட்டப்பேரவை செயலாளரிடம் திமுக சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்ல்லா தீர்மானத்தை முன்மொழிந்து எதிர்க்கட்சி தலைவர் அளித்த மனுவை பேரவை செயலாளரிடம் அளித்தோம் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேட்டார்.


Leave a Reply