வீராங்கனை கோமதிக்கு தமிழில் டிவிட் செய்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மீண்டும் கலக்கல்!

ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற தமிழக மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு தமிழில் டிவிட் செய்து, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்தியுள்ளார்.

 

சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ஐ.பி.எல். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். அப்போது முதலே தமிழ்நாடு மீதும், தமிழர்கள் மீதும் தனி ஈடுபாட்டு காட்டி வருகிறார் ஹர்பஜன் சிங்.

 

தமிழை கற்பதில் ஆர்வம் கொண்டவர்; தமிழக கலாச்சாராம், உணவு முறைகளை மிகவும் மதிப்பவர். சென்னை வந்தால் தமிழில் டிவிட் செய்வது, தமிழில் கருத்து பகிர்வது, ரஜினி உள்ளிட்ட தமிழக பிரபலங்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவிப்பது, தமிழர் உடைகளை உடுத்தி போஸ் கொடுப்பது என்று, அவரது தமிழார்வம் இங்குள்ள பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

 

இந்நிலையில், கத்தார் ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு, வழக்கம் போல் தமிழில் டிவிட் செய்து, ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 

அதில், “பசித்த வயிறு, பணமில்லாத வாழ்க்கை! உதவ ஒருவரும் இல்லை; ஆனால், இந்த பெண்ணி வெற்றிக்கதை, நமக்கு ஒரு பாடம். வெற்றி, நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே வரும் என்பதற்கு கோமதி சாட்சி!” என்று நெகிழ்ச்சியோடு ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார். இது, கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Leave a Reply