10ம் வகுப்பு தேர்வில் மீண்டும் அசத்திய திருப்பூர்! மாநில அளவில் முதலிடம்

தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. பிளஸ்2 வை போலவே இதிலும் திருப்பூர் மாவட்டம் 98.53% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்ததது.

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த மார்ச் 14 ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி, மார்ச் 29 இல் நிறைவடைந்தன. இத்தேர்வை, பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம், 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவியர் எழுதினர்.

 

இந்தாண்டுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. பிளஸ் 2 வை போலவே இதிலும் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்ததது. திருப்பூர் மாவட்டம் 98.53% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்ததது.

 

இரண்டாமிடத்தில் 98.48 % தேர்ச்சியுடன் ராமநாதபுரம் மாவட்டம், 98.45% உடன் நாமக்கல் மாவட்டம் மூன்றாமிடத்தில் உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 6100 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.53 சதவீதம், மாணவிகள் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொழிப்பாடம் : 96.12%, ஆங்கிலம்: 97.35%,  கணிதம்: 96.46%, அறிவியல்: 98.56%, சமூக அறிவியல் : 97.07% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

 

ரேங்க் பட்டியல் முறை ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது.தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பார்க்கலாம்.

 

மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து முடிவுகளை பார்க்க வேண்டும்.தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மாணவர்கள் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

 

பள்ளி மாணவர்களுக்கு , பள்ளியில் அவர்கள் அளித்த மொபைல்போன் எண்ணுக்கும்; தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த மொபைல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் விவரம், எஸ்.எம்.எஸ். ஆக அனுப்பப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறுகிறது. 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் மே 2 முதல் தங்கள் பள்ளியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்


Leave a Reply