சர்வர் பிரச்சனையால் ஏர்- இந்தியா விமான சேவைகள் கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு

சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏர் இந்தியாவின் விமான சேவைகள் முடங்கியுள்ளன.

 

மத்திய அரசின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் எஸ்.ஐ.டி.ஏ. சர்வரில் ஏற்பட்ட கோளாறு ஏற்பட்டதால், இன்று அதிகாலை 3.30 மணி முதல், அதன் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பாதிப்பு, இந்தியாவுள் என்று மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் ஏர் இந்தியா விமான சேவை முடங்கியுள்ளது. ஏர் இந்தியாவின் வருகை மற்றும் புறப்பாடு பற்றிய தகவல் கிடைக்காமல், சென்னை உள்பட பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

 

சர்வர் பழுதை சரி செய்யும் பணியில் ஏர் இந்தியா நிர்வாகம் முனைப்புடன் உள்ளது என்று ஏர் இந்தியாவின் தலைவர் அஸ்வானி லோகானி தெரிவித்தார்.


Leave a Reply