இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு; 15 பேர் பலி! மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Agency


இலங்கையில், நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 15 பேர் பலியாகினர். இதற்கிடையே, பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

 

இந்த நிலையில், கல்முனை என்ற இடத்தில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் நேற்றிரவு வெடிகுண்டு வெடித்தது. இதில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

 

இதற்கிடையே, ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை பாதுகாப்பு படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். அப்போது, ஐ.எஸ். பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேரை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது. பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மற்றொரு நடவடிக்கையில், வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ வெடிபொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தொடரும் குண்டு வெடிப்புகள், வெடிமருந்துகள் கண்டுபிடிப்பு போன்றவற்றால், இலங்கையில் இன்னமும் பதற்றமும் பீதியும் நீடிக்கிறது.