விபத்தை தடுக்க சாலை விரிவுபடுத்த வேண்டும். பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 15 வேலம்பாளையம் ரோட்டில் எஸ்பி நகர் ஸ்டாப்பில் அரசு பேருந்தும் மினி ஆட்டோவும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது இதில் ஆட்டோ ஓட்டுனருக்கு சிறிது காயத்துடன் உயிர் தப்பினார்.இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இப்பகுதியில் பள்ளிக்கூடங்கள். பனியன் கம்பெனி அதிகமாக உள்ளதால். இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. மிகவும் குறுகிய சாலையால். இதுபோன்று கோர விபத்துகள் அடிக்கடி நடக்கும் அபாயம் உள்ளன. அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்து சாலையை விரிவுபடுத்தும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Leave a Reply