பாம்பன் பாலத்தில் வெடிகுண்டா? போலீசாரின் தீவிர சோதனையால் பரபரப்பு

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

 

இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் ஏப்.19ல் வெடிகுண்டு வெடித்ததில் 359 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிசிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில், ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் வெடிகுண்டு தடுப்பு போலீசார், மோப்ப நாய் உதவியுடன் பாம்பன் ரயில், சாலை பாலங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

 

பாலத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற பெண்ணை பிடித்து விசாரணைக்கு பின்னர் விடுவித்தனர். சாலை பாலத்தை கடக்கும் அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை தீவிர சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், 2 பாலங்களிலும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply