ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்! இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த நம்ம ஊரு மங்கை

Publish by: செய்திக்குழு --- Photo : Agency


ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.

 

கத்தார் தலைநகர் தோகாவில், 23வது ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியா சார்பில், 30 வயதான தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து பங்கேற்றார். இவர் பந்தய தூரத்தை, 2 நிமிடம் 02.70 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

 

இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த திருச்சியை சேர்ந்த தங்க மங்கை கோமதி மாரிமுத்து

கோமதி மாரிமுத்து கூறுகையில், தங்கப்பதக்கம் வென்றுவிட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கடைசி 150 மீட்டர் மிகவும் கடினமாக இருந்தது என்றார். இப்போட்டியில் இந்தியா பெற்றுள்ள முதலாவது தங்கப்பதக்கம் இதுவாகும்.

 

தமிழகத்திற்கும், தேசத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ள கோமதி மாரிமுத்து திருச்சியை சேர்ந்தவர். ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து, இன்று நாட்டிற்கே தங்கம் வென்று புகழ் சேர்த்துள்ள அவரை, ‘குற்றம் குற்றமே’ இதழ் மனமார வாழ்த்துகிறது!


Leave a Reply