ஒரு பக்கம் பணமழை! மறுபக்கம் கனமழை!! குளிர்ந்து போன தமிழக மாவட்டங்கள்

Publish by: --- Photo :


தமிழகத்தில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா ஒரு பக்கம் நடந்ததாக கூறப்படும் நிலையில், இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து மக்களை குளிர்வித்துள்ளது.

 

தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. ஒருபுறம் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்து, பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பணம் பட்டுவாடா  நடந்ததாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

 

மறுபுறம் இன்று காலையில் முதல் இராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, திருநெல்வேலி, கொடைக்கானல், உதகை உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் காற்றுடன் பெய்த மழை, அப்பகுதியை குளிர்வித்துள்ளது.

 

தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் அளவுக்கு பெய்த மழையால், கடந்த சில வாரங்களாகவே கடும் வெயிலில் அவதிப்பட்டு வந்த தமிழக மக்கள், நிம்மதியடைந்தனர். இந்த மழை விவசாயிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.