காற்று, புழுதிப்புயலுடன் கனமழைக்கு வாய்ப்பு! மழைக்கு இதுவரை 30 பேர் பலியான சோகம்

வட மாநிலங்களில் ஏற்பட்ட திடீர் புழுதிப்புயல் மற்றும் கனமழைக்கு, இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 24 மணி நேரத்திற்கு இது தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

வடமாநிலங்களில் குறிப்பாக தலைநகர் டெல்லி  உள்ளிட்ட இடங்களில் திடீரென அவ்வப்போது புழுதிப்புயல் வீசுவதுண்டு. அதுபோல் தற்போது குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்பாராத விதமாக புழுதியுடன், கனமழையும் பெய்துள்ளது.

 

இந்த மழையால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதை தொடர்ந்து ஏற்பட்ட விபத்துகளில் இந்த இரண்டு மாநிலங்களிலும் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

அதேபோல், மத்திய பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அங்கு மடுட்ம் 12  பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதற்கிடையே வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் வட மாநிலங்களில்  புழுதி புயல், இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தேவையான உதவியை மத்திய அரசு செய்யும். நிலையை உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருவதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Leave a Reply