உங்கள் குழந்தைக்கு பள்ளியில் கோடை சிறப்பு வகுப்பா? உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கொஞ்சம் படிங்க!

தமிழகத்தில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தமிழத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று, தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இனி, ஜூன் 3ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், பல தனியார்கள் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 , 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டிருந்தன.

 

எனினும் பள்ளிக் குழந்தைகளின் நலன், கோடை வெயிலின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

 

இதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பள்ளிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இவ்வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று தீர்ப்பளித்தது. அதன்படி, கோடையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற அரசின் உத்தரவு சரியே என்று நீதிபதிகள் கூறினர்.

 

இது, கோடை வெயிலில் சிறப்பு வகுப்புக்கு சென்று வந்த பள்ளி குழந்தைகள், அவர்களின் பெற்றோருக்கு நிம்மதியை தந்துள்ளது.


Leave a Reply