48 வயது பிரியங்காவை இளம்பெண்ணாக சித்தரிக்கும் காங்கிரஸ் – கேரள பாஜக தலைவர் தாக்கு!

பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும், முக்கிய தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலையொட்டி, காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்கியுள்ளார். உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளுக்கும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


இந்நிலையில் கேரள மாநில பாஜக தலைவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை பிரியங்கா காந்தி குறித்து பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சி சீரழிவு நிலையில் உள்ளது. 48 வயதாகும் பிரியங்கா காந்தியை ‘அழகிய இளம்பெண்ணாக’ முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் பிரிவினைவாதத்தினை ஆதரிக்கும் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவை நாடியுள்ளார்’ என கூறினார்.

சபரிமலை விவகாரத்தை முன்வைத்து கேரளாவில் பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெறும் என சமீபத்தில் பி.எஸ் ஸ்ரீதரன் பிள்ளை கூறினார். மேலும் இவர் ஏற்கனவே பெண்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply