வேட்பு மனுத் தாக்கல். 91 தொகுதிகளுக்கு இன்றே கடைசி நாள்!

டெல்லி: 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிக்கு நடைபெறும் முதல் கட்ட லோக் சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 12ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் ஏப்ரல் 11ம் தேதி முதல் கட்டமாக 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளுக்கும், தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் ஏப்ரல் 11ம் தேதி நடைபெற உள்ளது.

முதல் கட்ட தேர்தல் ஆந்திராவில் 25, தெலுங்கானாவில் (17), உத்தரப்பிரதேசத்தில் (8), மகாராஷ்டிரா 7, உத்தர்காண்ட் (5), அஸ்ஸாம் (5), பீகார் (4), ஒடிசா (4) ஜம்மு மற்றும் காஷ்மீர் (2), அருணாச்சல பிரதேசம் (2), மேகாலயா 2, மேற்கு வங்கம் (2), சத்தீஸ்கர் (1), மணிப்பூர் (1), நாகலாந்து (1), திரிபுரா (1), சிக்கிம் (1), அந்தமான் நிக்கோபார் (1), லட்சத்தீவு (1) ஆகிய மாநிலங்களில் மொத்தம் 91 மக்களவை தொகுதிகளுக்கு முதல் கட்டமாக ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது

சட்டமன்ற தேர்தல் மக்களவை தேர்தலுடன் நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் ஏப்ரல் 11ம் தேதி நடக்கிறது, ஆந்திராவின் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், அருணாச்சால பிரதேசத்தின் 60 தொகுதிகளுக்கும், சிக்கிமின் 32 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. ஒடிசாவில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 11ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.


Leave a Reply