670 ஓட்டுச் சாவடிகள் பதற்ற மானவை: மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பேட்டி

சென்னை: ”சென்னையில், 670 ஓட்டுச் சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,” என, மாவட்ட தேர்தல் அலுவலர், பிரகாஷ் தெரிவித்தார்.

ஓட்டுச் சாவடி மையத்தில் பணிபுரிய உள்ள அரசு ஊழியர்களான, முதல் கட்ட பயிற்சி வகுப்பு, சென்னை, வியாசர்பாடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், நேற்று காலை நடந்தது.பயிற்சி வகுப்புகள்இதை, மாவட்ட தேர்தல் அலுவலர், பிரகாஷ் பார்வையிட்டார். பின் நிருபர்களிடம், அவர் பேசியதாவது:ஓட்டுச் சாவடி மையத்தில் பணிபுரிய உள்ள மத்திய – மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், அரசு சார்ந்த ஊழியர்கள் என, 24 ஆயிரம் நபர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில், 16 மையங்களில், பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.ஜனநாயகத்தில், தேர்தல் என்பது முக்கியமானது.
இதில், எந்தவித தவறும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நான்கு கட்டங்களாக, பயிற்சி வழங்கப்படுகிறது.சென்னையில், பறக்கும் படைகளின் எண்ணிக்கை, மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, 144 பறக்கும் படையினர், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களின் வாகனங்கள், ஜி.பி.எஸ்., வழியாக, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.அரசு கட்டடங்களில் இருந்த, 11 ஆயிரத்து, 800 விளம்பரங்கள்; தனியார் கட்டடங்களில் இருந்த, 12 ஆயிரத்து, 333 விளம்பரங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.இனி விளம்பரங்கள் எழுதப்பட்டால், அவை அழிக்கப்பட்டு, அந்தந்த கட்சியின் செலவில் சேர்க்கும் நடவடிக்கையும் எடுத்துள்ளோம்.

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட, 1.37 கோடி ரூபாய் மற்றும் 13.4 கிலோ தங்கம், 86.2 கிலோ வெள்ளி, 960 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.கூடுதல் பாதுகாப்புசென்னையில் உள்ள, 3,800 மையங்களில், 333 பதற்றமானவை; 337 மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவை உறுதி செய்யும், ‘விவபேட்’ இயந்திரம் எத்தனை பொருத்த வேண்டும் என்பதை, தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கிய பின், அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
சென்னையில் தேர்தல்ஓட்டுச்சாவடி மையங்கள் 3,800 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 10,796 கட்டுப்பாட்டு கருவிகள் 5,298 ‘விவிபேட்’ இயந்திரங்கள் 6,648.


Leave a Reply