கண்டெய்னர் லாரியில் இருந்து தப்பிசென்ற 2 ஒட்டகச்சிவிங்கிகள்
தாய்லாந்தில் கண்டெய்னர் லாரியில் இருந்து தப்பி சென்ற ஒட்டகச்சிவிங்கியை தேடும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. சச்சோயெங்சாவ் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விலங்குகள் வளர்ப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் போது கதவு சரியாக தாழிடப்படாத கண்டெய்னரில் இருந்து இரண்டு ஒட்டக சிவிங்கிகள் தப்பித்து சாலையில் ஓடின.
அதில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மற்றொன்று அடர்ந்த புதர் பகுதிக்குள் நுழைந்து விட்டது. தற்போது அதனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.






