--- --:--:-- --

சிலிண்டருக்கு பணம் செலுத்தும் முறையில் மாற்றம்

4

கேஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துமாறு இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கேஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வகையில் வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

அந்த ஆன்லைன் முகவரியை கிளிக் செய்து கேஸ் மெமோவில் குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளர்கள் நெட்பங்கிங், கிரெடிட் கார்ட் ,டெபிட் கார்ட் ஆகிய வழிமுறைகளின் செலுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சிலிண்டர் டெலிவரி செய்யும் வரும் பணியாளரிடம் டிஜிட்டல் மூலம் பணம் பெற வலியுறுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பணமாக செலுத்துவதை இறுதி வழியாக வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon