மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்..!
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் கோவை மண்டலத்தில் கல்லூரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் தங்களது கல்லூரிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டு கருவிகள், ஆய்வகங்கள் போன்றவற்றில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கட்டாயமாக அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டுமெனவும் தடுப்பூசி போடாத ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகளுக்கு ஆன்லைன் வழியே வகுப்புகள் தொடரும் என்றும் நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் இடங்களில் கண்காணிப்பு குழு அமைத்து வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.







