ஆபாச வீடியோ வெளியானதால் கே.டி ராகவன் ராஜினாமா..!
தமிழ்நாடு பாஜக பொதுச் செயலர் பதவியிலிருந்து கே.டி ராகவன் ராஜினாமா செய்துள்ளார். சமூகவலைதளத்தில் கே டி ராகவன் தொடர்பான ஆபாசமான வீடியோ வெளியான நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
முதல் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ட்விட்டரில் கே.டி ராகவன் வெளியிட்டுள்ள பதிவில் தமிழக மக்களுக்கும் கட்சியில் இருக்கும் தான் யார் என்று தெரியும் எனவும் தன்னையும் தன் கட்சியையும் களங்கப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக தெரிவித்துள்ள அவர் இதனை சட்டப்படி சந்திப்பேன் எனவும் கூறியுள்ளார்.







